வலங்கைமான் தாலுகாவில் சம்பா பாரம்பரிய நடவில் வடமாநில தொழிலாளர்கள்
*விரைவாக முடிக்க விவசாயிகள் முடிவு
வலங்கைமான் : வலங்கைமான் தாலுகாவில் சம்பா கை நடவில் உள்ளுர் விவசாயிகள் வடமாநில தொழிலாளர்களை அதிகமாக ஈடுபடுத்தி வருகின்றனர்..திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் நடப்புசம்பா பட்டதில் சாகுபடி முன்னதாக சுமார்20 ஆயிரம் ஏக்கர் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை சுமார் 70 சதவீதம் பரப்பளவில் நெல் நடவு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் விதை விடும் பணி முடிவுற்றுள்ளது.
நீண்ட கால நெல் ரகங்கள் விதை விடும் பணி முன்னதாக முடிவு பெற்றதை அடுத்து விரைவில் சன்ன ரகத்திற்கான விதை விடும் பணி துவங்க உள்ளது. மேலும் 30 சதவீத அளவு பரப்பளவில்
சம்பா நடவு மேற்கொள்வதற்கு ஏற்ற வகையில் சேற்று உழவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீண்டகால ரகமாக இயந்திர நடவு மூலம் நடவு பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை காலங்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் பகுதிகளில் நீண்டகால நெல் ரகத்தினை விவசாயிகள் நடவு செய்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வந்த வட மாநில தொழிலாளர்கள் வேளாண்மை பணிகளிலும் கடந்த சில ஆண்டுகளாக டெல்டா மாவட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர் திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பகுதியில் உள்ள ஊத்துக்காடு கிராமத்தில் முதன்முதலாக வட மாநில தொழிலாளர்கள் வேளாண்மை பணிக்கு ஈடுபடுத்தப்பட்ட நிலையில் தற்போதுவலங்கைமான் பகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலுமே வட மாநில தொழிலாளர்கள் நடவுப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் டெல்டா மாவட்டங்களில் பொதுவாக நாற்று பறிக்கும் பணிகளில் ஆண்களும் நடவு பணிகளில் பெண்களும் ஈடுபடுவது வழக்கம் .
இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் பாலின பாகுபாடு இன்றி அனைவரும் முதற்கட்டமாக நாற்று பறிக்கும் பணியிலும் பின்னர் நடவு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இயந்திர நடவுக்கு நிகராக நடவு பணிகளில் ஈடுபட்டு வரும் வடமாநில தொழிலாளர்கள்நமது பகுதிகளில் வழங்கப்படும் ஊதியத்தை விட குறைவாக இருப்பதாலும் ஆட்கள் பற்றாக்குறை தவிர்க்கும் வகையிலும் வட மாநில தொழிலாளர்களை விவசாயிகள் ஈடுபடுத்தி வருகின்றனர்ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 4600 என்ற தொகையில் நடவு பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இவர்கள் டெல்டா மாவட்டங்கள் முழுவதும் சிறுசிறு குழுக்களாக பிரிந்து நடவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் நாள் ஒன்றுக்கு குறைந்தபட்சமாக ரூபாய் 1000 ஊதியமாக பெறுகின்றனர்.
இது குறித்து முன்னோடி விவசாயிகள் கூறுகையில்வடமாநில தொழிலாளர்களைக் கொண்டு குறைந்த ஊதியத்தில் குறித்த நேரத்தில் நடவு பணிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இயந்திரம் நடவுக்கு நிகராக நடுவதால் விதைநெல் தேவையும் குறைவாகிறதுஎன கூறியுள்ளார்.
முன்னதாக வேளாண்மையில் உழவிலிருந்து அறுவடை வரை இயந்திரங்கள் பயன்படுத்தப்படாமல் ஆட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் வேளாண்மை பணியில் முதல் கட்டமாக உழவுக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது பின்னர் படிப்படியாக நடவு அறுவடை என அனைத்தும் இயந்திரங்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில் டெல்டா மாவட்டங்களில் முன்னதாக ஆண்டுக்கு 120 நாட்கள் மட்டுமே விவசாயக் கூலி தொழிலாளிகளுக்கு வேலை கிடைத்த நிலையில் இயந்திரங்களின் வருகையால் அவர்களது வேலை நாட்கள் குறைந்தது மேலும் டெல்டா மாவட்டங்களில் வேளாண்மை சாகுபடி பணிகளில் வட மாநில தொழிலாளர்கள் வருகையால் மேலும் வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது.