வைகை அணையில் இன்று தண்ணீர் திறப்பு: நீர்வளத்துறை உத்தரவு
சென்னை: வைகை அணையில் இருந்து இன்று முதல் 20 நாட்ளுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை தெரிவித்துள்ளது. பெரியாறு நீட்டிப்பு கால்வாயில் உள்ள பாசன பகுதிகளுக்கு 346 மி.க.அடி நீரினை வைகை அணையிலிருந்து பெரியாறு நீட்டிப்பு பாசனப் பகுதிகளுக்கு 20 நாட்களுக்கு தலா வினாடிக்கு 200 கன அடி வீதம் தண்ணீரை இன்று முதல் புலிப்பட்டி மதகிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 38248 ஏக்கர் பாசன பகுதிகள் பாசன வசதி பெறும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement