உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை!
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். மீரட் மாவட்டத்தில் உள்ள முகமதுபூர் கிராமத்தைச் சேர்ந்த ஷாகித் (35) என்பவர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி ஷாகித் (35) என்பவர் போலீசாரால் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். சிறுமிகள் பாலியல் வன்கொடுமை, கொள்ளை வழக்குகளில் தலைமறைவான மீரட்டின் பஹ்சுமா பகுதியைச் சேர்ந்த ஷாகித்தை போலீசார் தேடி வந்தனர்.
ஷாகித்தின் மறைவிடம் குறித்து கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு சென்று ஷாகித்தை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் போலீசாரை தாக்கி தப்ப முயன்றுள்ளார். இதனால் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியத்தில் காயமடைந்த ஷாகித் மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டார். அவரை சோதித்த மருத்துவர்கள் ஷாகித் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரின் உடலை போலீசார் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துனர். ஷாகித் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை வழக்கில் ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருந்தார் என கூறப்படுகிறது. சிறையில் இருந்து விடுதலையான பிறகு, அவர் மற்றொரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.