உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது: ராகுல்காந்தி பேச்சு
02:08 PM May 10, 2024 IST
லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். உத்தரப்பிரதேசத்தில் பா.ஜ.க. படுதோல்வி அடையும் என்று ராகுல் காந்தி பேசினார். உத்தரப்பிரதேச மாநிலம் கன்னோஜ் தொகுதியில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கூட்டாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். 10 ஆண்டுகளாக போலி வாக்குறுதிகள் அளித்து மக்களை பா.ஜ.க. தவறாக வழி நடத்தி வந்துள்ளது என்று அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.