உத்தரப்பிரதேசத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஆட்கொல்லி ஓநாயை கண்டதும் சுட உ.பி. அரசு உத்தரவு
Advertisement
இந்த ஓநாய்களை பிடிக்க வனத்துறை சார்பில் ஆப்ரேசன் பேரியா என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் வனத்துறை சார்பில் பல்வேறு இடங்களில் கூண்டுகள் வைப்பது, டிரோன் கேமராக்கள் மூலமாக கண்காணிப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம்பொதுமக்களை அச்சுறுத்தி வந்த 6 ஓநாய்களில் கடந்த வாரம் 4 ஓநாய்கள் வனத்துறையினரால் பிடிக்கப்பட்டது. மேலும் எஞ்சியுள்ள 2 ஓநாய்களை பிடிக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஓநாய் தாக்கி 5 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒரு சிறுமி படுகாயமடைந்துள்ளார். நாளுக்கு நாள் ஓநாய்களின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், ஓநாய்களை கண்டதும் சுட உத்தரவிட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே பிடிக்கப்பட்ட 4 ஓநாய்களும் பத்திரமாக வனப்பகுதிகளில் விடப்பட்டுள்ளது.
Advertisement