தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உத்தரகாண்டில் மேகவெடிப்பு நிலச்சரிவில் சிக்கி 5 பேர் பலி

டேராடூன்: உத்தரகாண்டில் சாமோலி, ருத்ரபிரயாக் மற்றும் பகேஷ்வர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மேகவெடிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் 5 பேர் பலியானார்கள். மேலும் 11 பேர் மாயமாகி உள்ளனர்.  உத்தரகாண்டின் உத்தரகாசி மாவட்டம் தாராலி கிராமத்தில் கடந்த 5ம் தேதி மேகவெடிப்பு காரணமாக, 69 பேரை காணவில்லை. மாயமானவர்களை தேடும் பணி தொடர்ந்து முழுவீச்சில் தீவிரமாக நடந்து வருகின்றது. இந்நிலையில் மீண்டும் மீண்டும் உத்தரகாண்டில் மேகவெடிப்பு ஏற்பட்டு வருகின்றது.

Advertisement

இந்நிலையில் நேற்று உத்தரகாண்டின் பல்வேறு மாவட்டங்களில் மேகவெடிப்பு காரணமாக கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாமோலி, ருத்ரபிரயாக் மற்றும் பகேஷ்வர் உள்ளிட்ட மாவட்டங்களும் கடுமையான இயற்கை பேரிடரினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அடங்கும். இரவு முழுவதும் பெய்த கனமழையினால் பாகேஷ்வர் மாவட்டத்தின் கப்கோட் பகுதியில் உள்ள பவுசரி கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆறுக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன.

மேலும் இரண்டு பேர் உயிரிழந்தனர். 11 பேரை காணவில்லை. சாமோலி மாவட்டத்தின் மொபாட்டா கிராமத்தில் வீடு மற்றும் மாட்டுத் தொழுவம் நிலச்சரிவில் சிக்கி புதையுண்டது. இதில் இடிபாடுகளில் சிக்கி தம்பதியினர் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 25கால்நடைகளை காணவில்லை. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் பசுகேதார் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையினால் ஆங்காங்கே நிலச்சரிவு சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. 6க்கும் மேற்பட்ட கிராமங்கள் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளன.

தல்ஜாமன் கிராமத்தில் சுமார் 30-40 குடும்பங்கள் இடிபாடுகள் மற்றும் வெள்ள நீரில் சிக்கியதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து மீட்பு குழுவினர் அங்கு விரைந்து நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறார்கள். ஜாகோலியில் வீடு ஒன்று இடிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார். செனகாட் பகுதியில் உள்ளூரை சேர்ந்த 4 பேர் மட்டுமின்றி ஏராளமான நேபாளத்தை சேர்ந்தவர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.

7-8 இடங்களில் சாலை உடைந்ததால் மீட்பு குழுவினர் பாதிக்கப்பட்ட பகுதியை அடைவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் சியுர் கிராமத்தில் வீடு ஒன்று பலத்த சேதமடைந்துள்ளது. மேலும் கார் ஒன்றும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளது.

தெஹ்ரி மாவட்டத்தில் புத்த கேதார் பகுதியிலும் மேகவெடிப்பு பலத்த சேதத்தை உருவாக்கி உள்ளது. மாட்டுக்கொட்டகைகள், கோயில்கள் இடிபாடுகளில் புதைந்தன. மழைவெள்ளம், நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொள்வதை உறுதி செய்யும்படி முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார்.

Advertisement