உத்தரகாசி நிலச்சரிவு: 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்
12:49 PM Aug 06, 2025 IST
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி இரண்டாவது நாளாக தீவிரமடைந்துள்ளது. இதுவரை சுமார் 600 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்புப்பணியில் NDRF, SDRF, ITBP மற்றும் இந்திய ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.