உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம்: பலி 5ஆக உயர்வு
04:18 PM Aug 06, 2025 IST
உத்தராகண்ட்: உத்தரகாசி காட்டாற்று வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. காட்டாற்று வெள்ளத்தில் காணாமல் போன 13 ராணுவ வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவர்களில் இதுவரை 150 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.