உதகை: உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 32,000 மலர்களை கொண்டு கூடுதலாக 5 மலர் சிற்பங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தலா 6,000 மலர்களை கொண்டு கிட்டார், காளான், படகு, பாராசூட், மலர் கொத்து ஆகிய சிற்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. உதகையில் 126-வது மலர் கண்காட்சி கடந்த 10-ம் தேதி தொடங்கியது. மலர் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக 1.2 லட்சம் மலர்களால் ஆன டிஸ்னி வேல்டு உருவம் வடிவமைக்கப்பட உள்ளது. 80,000 மலர்களால் ஆன உதகை மலை ரயில் உருவமும் ஏற்கனவே வடிவமைத்து காட்சிபடுத்தப்பட்டுள்ளது.