யுஎஸ் ஓபன் டென்னிஸ் 45 வயது வீனஸுக்கு சிறப்பு அனுமதி
நியுயார்க்: கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் வரும் 24ம் தேதி துவங்கி, செப். 7ம் தேதி வரை நடக்கவுள்ளன. இப்போட்டிகளில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க, வீனஸ் வில்லியம்சுக்கு (45 வயது) வைல்ட் கார்ட் என்ட்ரி எனப்படும் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன், கடந்த 1981ல் அமெரிக்க வீராங்கனை ரெனீ ரிச்சர்ட்ஸ், தனது 47வது வயதில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்று சாதனை படைத்திருந்தார்.
44 ஆண்டுக்கு பின் முதல் முறையாக தற்போது, அதிக வயதில் அமெரிக்க ஓபனில் பங்கேற்கும் வீராங்கனையாக வீனஸ் புதிய சாதனை படைத்துள்ளார். இவர், மகளிர் ஒற்றையர் பிரிவில் 7 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர்.