யுஎஸ் ஓபன் டென்னிஸ்; ஜோகோவிச், சபலென்கா கால்இறுதிக்கு தகுதி
நியூயார்க்: கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 4வது சுற்று போட்டியில் நம்பர்1 வீராங்கனையான பெலாரசின் அரினா சபலென்கா 6-1, 6-4 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் கிறிஸ்டினா புக்சாவை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தார். செக் குடியரசின் பார்போரா கிரெஜ்சிகோவா, 1-6, 7-6, 6-3 என அமெரிக்காவின் டெய்லர் டவுன்சென்ட்டையும், அமெரிக்காவின் ஜெசிகாபெகுலா 6-1, 6-2 என சகநாட்டைச் சேர்ந்த ஆன்லீயையும் வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தனர்.
9ம் ரேங்க் கஜகஸ்தானின் எலினாரைபகினா 4-6, 7-5, 2-6 என செக் குடியரசின் மார்கெட்டா வோண்ட்ரூசோவாவிடம் தோல்வி அடைந்தார். ஆடவர் ஒற்றையர் 4வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச் 6-3, 6-3, 6-2 என ஜெர்மனியின் ஜான்-லெனார்ட் ஸ்ட்ரஃப்பையும், அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ் 6-4, 6-3, 6-3 என செக் குடியரசின் தாமஸ் மச்சாக்கையும், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ் 7-6, 6-3, 6-4 என பிரான்சின் ஆர்தர் ரிண்டர்க்னெக்கையும் வீழ்த்தி கால்இறுதிக்கு தகுதி பெற்றனர்.