தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கனமழை, வௌ்ளம்: 15 குழந்தைகள் உள்பட 43 பேர் பலி

Advertisement

கெர்வில்லே: அமெரிக்காவின் தென்மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வியாழக்கிழமை இரவு முதல் வௌ்ளிக்கிழமை அதிகாலை வரை 11 அங்குல கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மாகாணத்தின் பல பகுதிகளில் வௌ்ள நீரில் மூழ்கி கிடக்கின்றன.

மலைப்பகுதியில் உள்ள கெர்கவுன்டியில் பெய்த தொடர் கனமழையால் குவாடலூப் ஆற்றின் நீரின் அளவு 45 நிமிடங்களில் 26 அடி உயர்ந்தது. இதனால் ஆற்றை சுற்றியுள்ள பகுதிகளில் நீரில் மூழ்கின. வௌ்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதில் 15 குழந்தைகள் உள்பட 43 பேர் பலியாகினர். மேலும் குவாடலூப் ஆற்றை ஒட்டிய இடத்தில் கோடைக்கால முகாமில் 700க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி இருந்தனர். அவர்களில் 27 சிறுமிகள் உள்பட பல பெண்கள் மாயமாகி உள்ளனர். மாகாண பேரிடர் மீட்பு குழுவினர் மீட்பு மற்றும் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து டெக்சாஸ் மாகாண ஆளுநர் கிரெக் அபோட் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த மழை, வௌ்ளம் குறித்து வானிலை ஆய்வு மையம் வௌ்ளிக்கிழமை அதிகாலையிலேயே எச்சரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும் இந்தளவுக்கு கனமழை பெய்யும் என எதிர்பார்க்கவில்லை. இதனால் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு அசாதாரண பேரழிவு. வௌ்ளத்தில் சிக்கிய 200க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். ஆயினும் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி தொடரும்” என தெரிவித்தார்.

Advertisement

Related News