அமெரிக்காவின் நியாயமற்ற வரி இந்தியா-சீனா இணைந்து பதிலடி தர வேண்டும்: தூதர் சூ பீஹோங் கருத்து
புதுடெல்லி: இந்தியாவுக்கான சீன தூதர் சூ பீஹோங் டெல்லியில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியாவும், சீனாவும் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகள். இந்த சவாலை எதிர்த்து இந்தியா உட்பட சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்ற சீனா தயாராக இருக்கிறது. இந்தியா, சீனா இடையேயான எல்லை பிரச்னைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது. நமது இரு தரப்பு உறவும் மூன்றாம் தரப்பால் பாதிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகளிடம் அதிகமான பணத்தை பெறுவதற்காக அமெரிக்கா வரியை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகிறது. இந்தியா மீது அமெரிக்காவின் 50 சதவீத வரி நியாயமற்றது. சீனா அதை உறுதியாக எதிர்க்கிறது. இந்த விஷயத்தில் இந்தியாவும், சீனாவும் இணைந்து செயல்பட்டு இந்த அச்சுறுத்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கூட்டாக ஆராய வேண்டும் என்றார்.
Advertisement
Advertisement