தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

யுஎஸ் ஓபன் டென்னிஸ்; அரையிறுதியில் எம்மா: போபண்ணா ஏமாற்றம்

நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் விளையாட, அமெரிக்க வீராங்கனை எம்மா நவரோ தகுதி பெற்றார்.காலிறுதியில் ஸ்பெயினின் பவுலா படோசாவுடன் (26 வயது, 29வது ரேங்க்) மோதிய எம்மா நவரோ (23 வயது, 12வது ரேங்க்) 6-2, 7-5 என்ற நேர் செட்களில் வென்றார். இப்போட்டி 1 மணி, 12 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. மற்றொரு காலிறுதியில் சீனாவின் கின்வென் ஸெங் (21 வயது, 7வது ரேங்க்) சவாலை எதிர்கொண்ட பெலாரஸ் நட்சத்திரம் அரினா சபலென்கா (26 வயது, 2வது ரேங்க்) 6-1, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
Advertisement

இப்போட்டி 1 மணி, 13 நிமிடத்துக்கு நடந்தது. ஆண்கள் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸுடன் மோதிய ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் 6-7 (2-7), 6-3, 4-6, 6-7 (3-7) என்ற செட் கணக்கில் 3 மணி, 26 நிமிடம் போராடி தோற்றார். மற்றொரு காலிறுதியில் அமெரிக்காவின் ப்ரான்சிஸ் டியபோ 6-3, 6-7 (5-7), 6-3, 4-1 என முன்னிலை வகித்த நிலையில், எதிர்த்து போட்டியிட்ட கிரிகோர் திமித்ரோவ் (பல்கேரியா) காயம் காரணமாக விலகினார். கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் - டொனால்டு யங் ஜோடியுடன் மோதிய இந்தியாவின் ரோகன் போபண்ணா - அல்டிலா சுட்ஜியாடி (இந்தோனேசியா) இணை 3-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்று ஏமாற்றத்துடன் வெளியேறியது.

Advertisement

Related News