ஈரான் தாக்குதலில் அமெரிக்க தூதரகக் கிளை சேதம்
11:34 AM Jun 16, 2025 IST
எருசலேம்: ஈரானின் பதிலடித் தாக்குதலில் இஸ்ரேல் தலைநகரில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கிளை சேதம் அடைந்தது. இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவில் அமெரிக்கத் தூதரகம் அருகே ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் சேதமடைந்த அமெரிக்கத் தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டது. தாக்குதலில் தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயமில்லை என அமெரிக்கா தகவல் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்கியதை அடுத்து ஈரான் கடந்த 4 நாட்களாக பதிலடித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.