தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அமெரிக்கா தடை எதிரொலி; பஹல்காம் தாக்குதலை டிஆர்எப் நடத்தியதற்கான ஆதாரம் எங்கே..? பாக். நாடாளுமன்றத்தில் துணைப்பிரதமர் ஆவேசம்

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை டிஆர்எப் அமைப்பினர் நடத்தியதாக கூறுவதற்கான ஆதாரம் எங்கே என்று பாக். நாடாளுமன்றத்தில் துணைப்பிரதமர் இஷாக் தார் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமான பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் கிளை அமைப்பான டிஆர்எப் பிரிவை வெளிநாட்டு தீவிரவாத அமைப்பு என அறிவித்தது அமெரிக்க அரசு. இதனை இந்தியா வரவேற்றது. இந்த நிலையில் பஹல்காம் தாக்குதலை டிஆர்எப் அமைப்பு தான் நடத்தியது என்பதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தார் கேள்வி எழுப்பியுள்ளார்.
Advertisement

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அவர் பேசியதாவது:

ஏப்ரல் 22 ஆம் தேதி பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பொதுமக்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவித்தது. மேலும் டி.ஆர்.எப் அமைப்பு தான் இதற்கு காரணம் என்று குறிப்பிடப்படுவதைத் தடுக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தரமற்ற உறுப்பினராக பாகிஸ்தான் தலையிட்டது.

ஐநா பாதுகாப்பு கவுன்சில் அறிக்கையில் டிஆர்எப் பற்றி குறிப்பிடப்பட்டதை நாங்கள் எதிர்த்தோம். இதற்காக உலக நாடுகளில் இருந்து எனக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் பாகிஸ்தான் அதை ஏற்காது என்றேன். அதன்பின் டிஆர்எப் பெயர் நீக்கப்பட்டது, பாகிஸ்தான் வெற்றி பெற்றது. டிஆர்எப் சட்டவிரோதமானது என்று நாங்கள் கருதவில்லை. பஹல்காம் தாக்குதலை அவர்கள் நடத்தியதற்கான ஆதாரத்தை எங்களுக்குக் காட்டுங்கள்.

டிஆர்எப் அதில் ஈடுபட்டதற்கான ஒரு ஆதாரத்தை காட்டுங்கள். ஆதாரம் எதையும் காட்டாமல் இந்தக் குற்றச்சாட்டை நாங்கள் ஏற்க மாட்டோம். எனவே தான் ஐநா செய்திக்குறிப்பில் இருந்து டிஆர்எப் பெயர் நீக்கப்பட வேண்டியிருந்தது. அமெரிக்கா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளிடமிருந்தும் வரும் டிஆர்எப் மீதான குற்றச்சாட்டையும் நாஙக்ள் நிராகரிக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

தி ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் (TRF) என்று அழைக்கப்படும் டிஆர்எப் அமைப்பை ஜூலை 18 ஆம் தேதி, அமெரிக்கா ஒரு வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பாக அறிவித்தது.

காஷ்மீரில் உள்ள பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய பாகிஸ்தான் ஆதரவு பெற்ற பயங்கரவாதக் குழுவான டி.ஆர்.எப். பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் உதவி அமைப்பாக உள்ளது.

Advertisement