அமெரிக்காவுக்கான அனைத்து அஞ்சல் சேவைகளும் ரத்து இந்தியா அறிவிப்பு
புதுடெல்லி: இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா விதித்துள்ள 50 % வரி கடந்த 27ம் தேதி அமலுக்கு வந்தது. இதை தொடர்ந்து அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு அறிவித்தது. கடந்த 22ம் தேதி அரசு வெளியிட்ட அறிவிப்பில்,100 அமெரிக்க டாலர் வரை உள்ள பொருட்கள் மட்டும் தபாலில் அனுப்பலாம் என்று குறிப்பிட்டிருந்தது.
Advertisement
இந்திய தபால்துறை நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், அமெரிக்காவுக்கு செல்லும் தபால்களை தொடர்ந்து கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது.வரையறுக்கப்பட்ட ஒழுங்குமுறை விதிகள் இல்லை. எனவே அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் கடிதங்கள், ஆவணங்கள்,100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசு பொருட்கள் உள்பட அனைத்து வகை தபால்களின் முன்பதிவையும் முற்றிலும் நிறுத்தி வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement