தாழ்வாக தொங்கிய மின்கம்பியில் உரசி யானை உயிரிழப்பு
Advertisement
மற்ற இரண்டு யானைகளை நேற்று காலை வனத்துறையினர் அடர்ந்த காட்டிற்கு விரட்டினர். தகவல் அறிந்த ஓசூர் வனக்கோட்ட உயிரின காப்பாளர் கார்த்திகேயினி வந்து விசாரணை மேற்கொண்டார். இறந்த ஆண் யானைக்கு 40 வயது இருக்கும், 8 அடிக்கும் கீழ் மின்கம்பி தொங்கியபடி சென்றதால் அதில் யானை உரசி, மின்சாரம் தாக்கி 30 அடி பள்ளத்தில் விழுந்து இறந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனைக்கு பின் யானையை அங்கேயே குழிதோண்டி புதைத்தனர்.
Advertisement