தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாம்பரம்-செங்கல்பட்டு இடையே மேல்மட்ட சாலை திட்டத்தை வலியுறுத்துவோம்: பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

சட்டப்பேரவையில் நேற்று காலை நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் பாமக எம்எல்ஏ சிவக்குமார் (மயிலம்) பேசுகையில், “இந்த நிதியாண்டில் நெடுஞ்சாலைத் துறைக்கு ரூ.20,423 கோடிதான் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது போதுமானது அல்ல. தமிழகத்தில் இப்போது 65 சுங்கச்சாவடிகள் இருக்கின்றன. இதில், 17 சுங்கச்சாவடிகள் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு நிறுவப்பட்டுள்ளது. தமிழக அரசு சுங்கச்சாவடிகளை குறைக்க நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.
Advertisement

மேலும் பேசிய அவர், தமிழகத்தில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளையும் 4 வழிச்சாலைகளாக மாற்ற வேண்டும். எனது தொகுதியான மயிலத்தை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். மயிலம் தொகுதியில் நகராட்சி, பேரூராட்சிகள் இல்லை. மயிலத்தில் அரசு கலை கல்லூரி அமைத்துதர வேண்டும். தொகுதியின் மையப்பகுதியில் தீயணைப்பு நிலையமும், காவல் நிலையமும் அமைத்துதர வேண்டும்”என்றார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை குறைக்க கோரி மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதேபோல், தாம்பரம்-செங்கல்பட்டு இடையே 27 கி.மீ. தூரத்துக்கு மேல்மட்ட சாலை அமைக்க நாம் திட்டமிட்டோம். ஆனால், ஒன்றிய அரசு 6 வழி பசுமைச் சாலையாக அமைக்க திட்டமிட்டு இருப்பதாக சொல்கிறது. இருந்தாலும், மேல்மட்ட சாலை அமைக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்” என்றார்.

Advertisement

Related News