உ.பி. 121 பேர் பலி சம்பவம்.. ஹத்ராசில் நெரிசல் ஏற்பட, நச்சு திரவம் தெளிக்கப்பட்டதா?: போலே பாபா தரப்பு வழக்கறிஞர் திடுக்கிடும் தகவல்!!
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சுமார் 15 பேர் முகத்தை மறைத்தபடி கூட்டத்திற்குள் புகுந்து நச்சு திரவத்தை தெளித்தனர் என்று சாமியாரின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் திடுக்கிடும் புகாரை தெரிவித்துள்ளார். இதுவே 121 பேர் மரணமடைய காரணமாகி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த மர்ம நபர்கள் 15 பேர் தப்பிச் செல்வதற்காக வாகனங்களும் தயார் நிலையில் இருந்ததாக சாமியாரின் வழக்கறிஞர் கூறியுள்ளார். இறந்தவர்கள் மூச்சு திணறிதான் இறந்தார்கள் என்றும் மிதிபட்ட காயத்தால் இறக்கவில்லை என்றும் ஏ.பி.சிங் விளக்கம் அளித்துள்ளார்.
சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆராயுமாறு சாமியாரின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டுள்ளார். 121 கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த வழக்கில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உட்பட 9 பேர் கைதாகி உள்ளனர். ஆனால் இந்த நிகழ்ச்சியை டிப் -டாப் சாமியார் போலே பாபாவின் பெயர் முதல் தகவல் அறிக்கையில் சேர்க்கப்பட்டவில்லை. அத்துடன் 2ம் தேதி முதல் அவர் எங்கு உள்ளார் என தெரியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.