உபி அரசு மருத்துவ கல்லூரிகளில் 79% இட ஒதுக்கீடு ரத்து: அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
லக்னோ: நீட் தேர்வர் சப்ரா அகமது அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். இந்தாண்டு நீட் தேர்வில் அகில இந்திய அளவில் 29,061 ரேங்குடன், 523 மதிப்பெண்கள் பெற்றேன். ஆனால், ற மனுதாரர், 2010 மற்றும் 2015 க்கு இடையில் வெளியிடப்பட்ட தொடர்ச்சியான அரசு உத்தரவுகள் சட்டவிரோதமாக இடஒதுக்கீடு வரம்பை அதிகரித்துள்ளது.
Advertisement
மாநில அரசு ஒதுக்கீட்டில் தலா 85 இடங்களைக் கொண்ட கல்லூரிகளில்,பொது பிரிவிற்கு ஏழு இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படுவதாக மனுவில் கூறியிருந்தார்.இடஒதுக்கீடு வரம்பில் எந்தவொரு அதிகரிப்பும் சட்ட நடைமுறைகள் மற்றும் விதிகளின்படி செய்யப்பட வேண்டும் என்று நீதிபதிகள் கூறினர். இதனால். உ.பி மருத்துவ கல்லூரிகளில் 79 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்த நீதிபதிகள், இட ஒதுக்கீடு 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என உ.பி. அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement