பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் 25 பட்டபடிப்புகளின் இணைத்தன்மை அரசாணை வெளியீடு
சென்னை: மனோன்மணியம் சுந்தரனார், மதுரை காமராஜர், திருவள்ளுவர் மற்றும் பாரதியார் பல்கலைக் கழகங்களில் வழங்கப்படும், பி.லிட் தமிழ் படிப்பு, பிஏ தமிழ் படிப்புக்கு சமமானதாகும். அதேபோல், தமிழ்நாடு திறந்த நிலை பல்கலை சார்பில், வழங்கப்படும், பிஏ தமிழ் படிப்பு, பிலிட் தமிழ் படிப்புக்கு சமமானது.
பெரியார் பல்கலையின் பி.லிட் ஆங்கில இலக்கிய படிப்பு, பிஏ ஆங்கிலத்துக்கும், எம்.லிட் ஆங்கில இலக்கியம் படிப்பு, எம்ஏ ஆங்கிலம் படிப்புக்கும் சமமானது. மனோன்மணியம் பல்கலை. வழங்கும் எம்எஸ்சி உயிரி வேதியியல் தொழில்நுட்பம், எம்எஸ்சி உயிரிதொழில்நுட்ப படிப்புக்கு இணையானது.
சென்னை பல்கலை. வழங்கும் கணினி பயன்பாட்டுடன் கூடிய பிஎஸ்சி இயற்பியல் படிப்பானது, பிஎஸ்சி இயற்பியல் படிப்புக்கு இணையானது. அண்ணா பல்கலை.யின் எம்பிஏ (விருப்ப பொருளாதார படிப்பு), மற்றும் அழகப்பா பல்கலை வழங்கும் எம்பிஏ (வங்கி மற்றும் நிதி) படிப்பு, எம்பிஏ (பொருளாதாரம்) படிப்புக்கு சமமானது. இவை உட்பட 25 படிப்புகளுக்கு, இணைத்தன்மை வழங்கப்பட்டுள்ளது என உயர்கல்வித் துறை செயலர் சங்கர் தெரிவித்துள்ளார்.