அமெரிக்க வரி விதிப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நல்ல முடிவு வரும்: நிதியமைச்சர் பேட்டி
சென்னை: ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சென்னைவிமான நிலையத்தில் நேற்று அளித்த பேட்டி: பீகாரில் நடந்த காங்கிரஸ் பொது கூட்டத்தில், காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், பிரதமர் மோடியின் அம்மாவை பற்றி, மிகவும் தரக்குறைவாக பேசியது, எங்களுக்கு மிகுந்த மன வேதனையை உருவாக்கி உள்ளது. தாயை மதிக்கும் தமிழ்நாட்டில், உள்ள காங்கிரஸ் கட்சியாவது, இந்த செயலை கண்டிக்க வேண்டும். அமெரிக்காவின் 50 % வரியால், பாதிக்கப்படுபவர்களுக்காக, மாற்று ஏற்பாடுகள் செய்வது குறித்து ஆலோசனை செய்து வருகிறோம்.
ஏற்றுமதி செய்பவர்களுக்காக, விரைவில் நல்ல முடிவு வரும். அமெரிக்காவால் நஷ்டம் அடைபவர்களுக்கு, உதவியாக நாங்கள் இருப்போம். தமிழக பா.ஜ நிர்வாகிகளுடன் உயர்மட்ட குழு அடிக்கடி பேசிக் கொண்டு தான் இருக்கிறது. அவர்களுக்குள் எந்த பூசலும் இல்லை. பாஜவில் உட்கட்சி பூசல் என்று கூறுவது தவறானது. இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.