தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு ஒன்றிய அரசு அனுமதி

Advertisement

டெல்லி: இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஜம்மு - காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் 4 பேர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 26 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இது இருநாடுகளுக்கும் இடையில் தீவிரமான போராக மாறியதில் பாகிஸ்தான் தரப்பில் 100 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மற்றும் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால், இந்தியா - பாகிஸ்தான் இடையில் எந்த உறவும், இரு நாடுகளுக்கு இடையிலான எந்தப் போட்டியில் விளையாடப் போவதில்லை என முடிவெடுக்கப்பட்டது. இதனிடையே ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பீகாரில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி சென்னை, மதுரையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற உள்ளன. ஆசிய கோப்பை போட்டியில் நடப்பு சாம்பியன் தென் கொரியா, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகளும், ஜூனியர் உலகக் கோப்பையில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, இந்தியா, பாகிஸ்தான் உள்பட 24 அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த போட்டிகளில் பங்கேற்க பரம எதிரியான பாகிஸ்தான் அணிக்கு அனுமதி அளிக்கப்படுமா? என்று கேள்விக்குறி எழுந்தது. இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஹாக்கி போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணிக்கு ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. ஆசிய கோப்பை ஹாக்கி, ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டிகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும். பல்வேறு சர்வதேச நாடுகள் விளையாடும் போட்டித் தொடரில் பாகிஸ்தானுக்கு தடைவிதிக்கமுடியாது. இந்தியாவுக்கு எதிரான நாடு பாகிஸ்தான் கிடையாது. இருதரப்பு போட்டிகள் வேறு; சர்வதேச தொடர்கள் வேறு என்றும் மத்திய விளையாட்டு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

Related News