ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதிசெய்வதே முதல் பணி: எக்ஸ் தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
Advertisement
மேலும், இந்த சாதனையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டி, இந்தியாவெங்கும் ஓபிசி இடஒதுக்கீடு குறித்த பல பயனுள்ள விவாதங்களுக்கு வழிவகுத்ததில் அகில இந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது. நாம் செய்ய வேண்டிய பணிகள் பல உள்ளன என்றாலும், உடனடியாகச் செய்தாக வேண்டியது ஒன்றிய அரசு சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்வதுதான், அப்போது தான் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் விகிதத்தை அறிந்து, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் நமது பங்கைப் பெற முடியும். இதனைச் சாதிக்க ஒன்றிணைந்து பணியாற்றிடுவோம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Advertisement