தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசின் 70 வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு

Advertisement

டெல்லி: 70 வது தேசிய திரைப்பட விருதுகள் சிறந்த நடிகர் முதல் முக்கிய விருதுகளை யார் வென்றார்கள் என்று இன்று அறிவிக்கப்பட்டு வருகிறது. தமிழ் நடிகர்களுக்கு மட்டுமல்லாமல் எல்லா மொழி பிரபலங்களுக்குமே விருதுகள் என்பது ரொம்பவே முக்கியமானது தான். ஏனெனில் அவர்களின் திறமைக்கான அங்கீகாரமாகவே அது கருதப்படுகிறது. அந்த வகையில் தேசிய விருதுகள் மீது பிரபலங்களுக்கு எப்போதும் ஒரு ஆர்வம் இருக்கும்.

இந்நிலையில் 70வது தேசிய திரைப்பட விருதுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், சிறந்த தமிழ் திரைப்படமாக மணி ரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் 1 தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பொன்னியின் செல்வன் பாகம் 1’ படத்துக்காக வென்று இருக்கிறார். சிறந்த ஒளிப்பதிவாளராக ரவிவர்மன் பொன்னியின் செல்வன் படத்திற்காக விருதை வென்று இருக்கிறார். தமிழில் அதிக விருதுகளை பொன்னியின் செல்வன் படம் குவித்துள்ளது.

சிறந்த திரைப்பட புத்தகமாக கிஷோர் குமாரின் வாழ்க்கை வரலாற்று புத்தகத்துக்கு தேசிய விருது அறிவித்துள்ளனர். மேலும், சிறந்த கன்னட திரைப்படமாக கே.ஜி.எப் 2 படமும், சிறந்த மலையாள திரைப்படமாக சவுதி வெள்ளைக்காவும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த தெலுங்கு திரைப்படமாக கார்த்திகேயா2, சிறந்த ஹிந்தி திரைப்படமாக குல்மோகர் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகராக காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதுப்போல சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக காந்தாரா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

சிறந்த நடிகையாக நித்யா மேனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டிற்கான சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருது ஜானி மாஸ்டர், சதீஷ் கிருஷ்ணன் பெறுகின்றனர். திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டர், சதிஷ் கிருஷ்ணனுக்கு விருது அறிவித்துள்ளனர்.

‘KGF 2' படத்திற்காக சிறந்த சண்டைப் பயிற்சியாளருக்கான தேசிய விருது அன்பறிவ் சகோதரர்களுக்கு அறிவித்துள்ளனர். KGF 1 படத்திற்கும் இவர்கள் தேசிய விருது வென்றிருந்தனர்.

2022ஆம் ஆண்டின் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை பாம்பே ஜெயஸ்ரீ பெறுகிறார். மலையாளத்தின் வெளியான 'சவுதி வெல்லக்கா' படத்தின் பாடலுக்காக பாம்பே ஜெயஸ்ரீக்கு அங்கீகாரம் கிடைத்தது. பிரம்மாஸ்திரா 1 படத்துக்காக கேசரியா பாடலை பாடிய பின்னணி பாடகர் அர்ஜித் சிங்குக்கு தேசிய விருது அறிவித்துள்ளனர்.

Advertisement

Related News