ஒன்றிய அரசின் திட்டங்களை புரியாமல் விஜய் மனநிலை பாதித்த சிறுவன் போல பேசுகிறார்: தமிழக பாஜ கடும் தாக்கு
சென்னை: மத்திய அரசின் திட்டங்களை புரியாமல் மனநிலை பாதித்த சிறுவனைப் போல கூட்டங்களில் விஜய் பேசுகிறார் என்று பாஜ குற்றம் சாட்டியுள்ளது. தமிழக பாஜ மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்ட அறிக்கை: தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் முதல் கூட்டம் தொடங்கி தற்போதைய திருச்சி பொதுக்கூட்டம், தேர்தல் சுற்றுப்பயணம் வரை கலர் கலராய் தமிழக மக்களிடம் கொள்ளை அடித்த லாட்டரி பணத்தில், விளம்பர ரீல் நடிப்பு அரசியல் செய்து, பாஜ பற்றியும் ஒன்றிய அரசு பற்றியும் ஒன்றிய அரசின் திட்டங்களை பற்றியும் அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும், மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனைப் போல விஜய் தன்னுடைய கூட்டங்களில் பேசி வருகிறார்.
நடிகர் விஜய்க்கு இருக்கும் நடிகரின் கூட்டத்தை வைத்து அரசியல் கணக்கை துவக்குவதற்கான முயற்சி தற்போது தோற்றுவிடும் என்ற எண்ணம், அரசியல் விஜய்யின் தொடர் செயல்பாடுகளில் தமிழக மக்கள் அனைவரின் மனதிலும் பரவலாக வந்துள்ளது. நடிகர் விஜய் இனியாவது சூழ்ச்சி அரசியலை விடுத்து மக்கள் நல அரசியல் செய்ய வேண்டும். தற்போது திமுகவுக்கு மாற்று அதிமுக, பாஜ அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி தான் என்ற எண்ணம் மக்களின் மனதில் வலுவாக உருவாகி வருகிறது. சனிபகவானை பற்றி தெரியாத ஞான சூனியம் செபாஸ்டின் சைமன் இந்து கடவுள்களைப் பற்றி இனி பேசுவதை நிறுத்த வேண்டும். அரசியலில் உதாரணங்கள் அவருக்கு தேவைப்பட்டால் புதிய ஏற்பாட்டிலும் பழைய ஏற்பாட்டிலும் இருக்கும் உதாரணங்களை பட்டியலிட்டு கொள்ளலாம். இது செபாஸ்டின் சைமனுக்கு ஒரு இறுதி எச்சரிக்கை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.