ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபிக்கிறது: எடப்பாடிக்கு டி.ஆர்.பி.ராஜா பதிலடி
சென்னை: தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா எக்ஸ்தள பதிவு: அறிக்கை என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி அரைத்த மாவையே திரும்பத் திரும்ப அரைத்து புளிப்பு காமெடி செய்து கொண்டிருக்கிறார். முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள் ஒவ்வொன்றும் தமிழ்நாட்டுக்கு முதலீடுகளைக் கொண்டு வந்து, தமிழ்நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உறுதி செய்கிறோம்.அவர் கூட்டணி வைத்திருக்கும் பா.ஜ.க.வின் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களே தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை நிரூபித்து வருகின்றன. அதனைப் பொறுக்கமுடியாமல், வயிற்றெரிச்சல் கொண்டு மீண்டும் அறிக்கை விட்டிருக்கிறார். தான் முதல்வராக இருந்தபோது வெளிநாடுகளுக்கு சென்று, ஸ்பூனில் போன்டா சாப்பிட்டதையே மிகப் பெரிய சாதனையாக கருதிக்கொண்டிருக்கும் பழனிசாமிக்கு புரிதல் இல்லாததில் வியப்பொன்றுமில்லை.
Advertisement
Advertisement