தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி போலி சிபிஐ ஆபீசர் கைது: விமானத்தில் வந்து டெல்லிக்கு தூக்கி சென்ற அதிகாரிகள்

கோவை: ஒன்றிய அரசு வேலை வாங்கிக்கொடுப்பதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்த போலி சிபிஐ அதிகாரி கைது செய்யப்பட்டார். கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சித்திரவேல்(32). இவர் டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் சிபிஐ அதிகாரி என்று கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய அரசில் வேலை வாங்கி தருவதாகவும் பலரிடம் பணம் மோசடி செய்துள்ளார்.

Advertisement

மேலும் ஆன்லைனில் மோசடியும் செய்து வந்துள்ளார். இதுகுறித்து டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகளுக்கு புகார் சென்றது. அதனடிப்படையில் சிபிஐ அதிகரிகள் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அதில், சித்திரவேல், கோவை ரேஸ்கோர்சில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரது செல்போன் லொக்கேஷனை வைத்து இருப்பிடத்தை கண்டறிந்து 5க்கும் மேற்பட்ட சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு விமானம் மூலம் கோவை வந்தனர்.

ரேஸ்கோர்சில் உள்ள ஒரு வீட்டில் வைத்து சித்திரவேலை கைது செய்தனர். வீட்டில் சோதனையிட்டபோது ஏராளமான போலி சிபிஐ அடையாள அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய கோவையில் தனி இடத்தில் மத்திய ஆயுதப்படை போலீஸ் உதவியுடன் சித்திரவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரித்தனர்.

தொடர்ந்து, நேற்று அவரை கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டெல்லி அழைத்து செல்ல சிபிஐ அதிகாரிகள் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி சிவக்குமார் டெல்லி அழைத்து செல்ல அனுமதி வழங்கினார். இதனை தொடர்ந்து சித்திரவேலை சிபிஐ அதிகாரிகள் டெல்லி அழைத்து சென்றனர். அங்கு கூடுதல் தலைமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளார். அதன்பிறகு காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement

Related News