நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது ஒன்றிய அரசு
Advertisement
டெல்லி: நாட்டில் சிறந்த உயர்கல்வி நிறுவனங்களின் தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சென்னை ஐஐடி தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது. தரவரிசையில் இரண்டாம் இடத்தில் டெல்லி ஐஐடி, 3 ஆம் இடத்தில் மும்பை ஐஐடி உள்ளது. நாட்டில் அரசு பல்கலைக்கழகங்களில் அண்ணா பல்கலைக்கழகம் 2வது இடம். கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 10வது இடத்தை பிடித்துள்ளது. 17 பிரிவுகளில் சிறந்த கல்வி நிறுவனங்களின் பட்டியலை ஒன்றிய அரசு வெளியிட்டது.
Advertisement