தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒன்றிய உள்துறை அமைச்சகம் ஜமீன்தார் மனநிலையில் செயல்படுகிறது: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. காட்டம்

Advertisement

டெல்லி: ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று ஜமீன்தார் மனநிலையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக விமர்சித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகெத் கோகேல், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள் ஜமீன்தார் மனநிலையை தொடர்ந்து எதிர்க்கும் என்று உறுதிப்பட தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் பேசிய அவர்; நிதி ஒதுக்கீட்டில் ஐக்கிய முற்போக்கு அரசுடன் ஒப்பிட்டு பாஜக அரசை காட்டமாக விமர்சித்தார். மாநிலங்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் இருப்பதைப் போல் நடந்து கொள்கின்றனர்.

யாராவது ஒன்றிய அரசை எதிர்த்தால் அவர் நாட்டின் எதிரி போல் சித்தரிக்கப்படுகிறார். சிறிய மாநிலங்களால் இதுபோன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட முடியாமல் இருக்கலாம். ஆனால், சக்தி மிக்க மேற்கு வங்கம் போன்ற மாநிலங்கள், ஜமீன்தார் மனநிலையைத் தொடர்ந்து எதிர்க்கும். மேற்குவங்க மக்கள் ஒன்றிய அரசால் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று சில புள்ளிவிவரங்களை சமர்ப்பிக்க விரும்புகிறேன். 2011-2012 நிதியாண்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், மேற்குவங்கம், மத்திய நவீனமயமாக்கல் நிதி ரூ.44 கோடி பெற்றது.

10 ஆண்டுகளுக்கு பிறகு 2021 - 2022ஆம் நிதியாண்டில் மேற்குவங்கம் பெற்ற நிதி பூஜ்ஜியம். 2013 -2014ஆம் நிதியாண்டில் ரூ.59 கோடி மேற்குவங்கம் நிதியாக பெற்றது. அதுவே 2023 -2024ஆம் நிதியாண்டில் பூஜ்ஜியம். 2020 - 2024 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நாங்கள் மத்திய நவீனமயமாக்கல் நிதியாக 160 கோடி ரூபாய் பெற்றிருக்க வேண்டும். ஆனால் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி வழங்கவில்லை என்று கூறினார்.

Advertisement

Related News