ஒன்றிய அரசு நிறுவனத்தில் சயின்டிபிக் ஆபீசர், அசிஸ்டென்ட்
ஒன்றிய அரசு நிறுவனமான டாடா மெமோரியல் மருத்துவமனையில் சயி்ன்டிபிக் ஆபீசர், அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
I. சயின்டிபிக் ஆபீசர் ‘சி’:
i) Center for Cancer Epidemiology: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.56,100. வயது: 35க்குள். தகுதி: புள்ளியியல்/ பொது சுகாதாரம்/ உயிரி அறிவியல்/மைக்ரோ பயாலஜி/லைப் சயின்ஸ்/ சோஷியல் சயின்ஸ்/ சோஷியல் வொர்க் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் முதுநிலை பட்டம் தேர்ச்சியுடன், கம்ப்யூட்டர் அறிவும், 3 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
ii) Information Technology- Net Working: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.56,100. வயது: 35க்குள். தகுதி: கம்ப்யூட்டர் சயின்ஸ்/இன்பர்மேஷன் டெக்னாலஜி ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 50% மதிப்பெண்களுடன் பி.இ.,/பி.டெக்., தேர்ச்சி மற்றும் 3 வருட பணி அனுபவம்.
II. Scientific Assistant ‘B’:
i) Nuclear Medicine: 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-1, எஸ்சி-1). சம்பளம்: ரூ.35,400. வயது: 30க்குள். தகுதி: இயற்பியல்/வேதியியல்/உயிரியல்/அணு மருத்துவம் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) Cancer Cytogenetic Lab: 1 இடம் (ஒபிசி). சம்பளம்: ரூ.35,400. வயது: 30க்குள். தகுதி: உயிரி வேதியியல்/வேதியியல்/தாவரவியல்/விலங்கியல்/லைப் சயின்சஸ் பிரிவில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
iii) Animal Science : 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400. வயது: 30க்குள். தகுதி: அணுமருத்துவம் தொழில்நுட்பத்தில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சியும், ஒரு வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.
III. Technician ‘A’ (CRI LABS): 4 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.19,900. வயது: 27க்குள். தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
www.actrec.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.08.2025.