ஒன்றிய அரசின் பொதுத் துறை நிறுவனத்தில் 361 அப்ரன்டிஸ்
பயிற்சிகள்:
1. டிரேடு அப்ரன்டிஸ்: 175 இடங்கள். (எலக்ட்ரீசியன்-32, பிளம்பர்-18, சர்வேயர்-2, பிட்டர்-8, மிஷினிஸ்ட்-4, வெல்டர்-8, கார்பென்டர்-8, கம்ப்யூட்டர் ஆபரேட்டர்-63, டிராப்ட்ஸ்மேன் (சிவில்)-14, டிராப்ட்ஸ்மேன் (மெக்கானிக்கல்)-6, ஸ்டெனோகிராபர்-10, ஹெல்த் இன்ஸ்பெக்டர்-2) தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் பயிற்சியளிக்கப்படும் டிரேடில் ஐடிஐ படித்திருக்க வேண்டும்.
2. கிராஜூவேட் அப்ரன்டிஸ்: 131 இடங்கள்.(சிவில்-21, எலக்ட்ரிக்கல்-14, மெக்கானிக்கல்-11, கம்ப்யூட்டர் சயின்ஸ்-11, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்-3, ஹெச்ஆர் எக்சிக்யூடிவ்-31, பைனான்ஸ் எக்சிக்யூட்டிவ்-13, சிஎஸ்ஆர் எக்சிக்யூடிவ்-5, லா எக்சிக்யூட்டிவ்-5, பிஆர் எக்சிக்யூட்டிவ்-8, ராஜ்பாஷா அசிஸ்டென்ட்-5, நர்சிங் அசிஸ்டென்ட்-1, பிசியோதெரபி அசிஸ்டென்ட்-2, சேப்டி அசிஸ்டென்ட்-1.) தகுதி: பொறியியல் பாடப்பிரிவு பயிற்சியில் சேர, காலியிடங்கள் ஏற்பட்டுள்ள ெபாறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., படித்திருக்க வேண்டும்.
i) ஹெச்ஆர் எக்சிக்யூட்டிவ்: எம்பிஏ (ஹெச்ஆர்) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ii) சிஎஸ்ஆர் எக்சிக்யூட்டிவ்: சோஷியல் வொர்க்/ரூரல் டெவலப்மென்ட்டில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iii) பிஆர் எக்சிக்யூட்டிவ்: மாஸ் கம்யூனிகேசன்/ஜர்னலிசம் பிரிவில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
iv) நிதி: பி.காம்., பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
v) சட்டம்: 3 வருட அல்லது 5 வருட சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேணடும்.
vi) நர்சிங்: பிஎஸ்சி நர்சிங் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
vii) பிசியோதெரபி: பிபிடி (B.Pt) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
viii) ராஜ்பாஷா அசிஸ்டென்ட்: இந்தி மற்றும் ஆங்கில பாடங்களுடன் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
3. டெக்னீசியன் அப்ரன்டிஸ்: 55 இடங்கள். (சிவில்-12, எலக்ட்ரிக்கல்-12, மெக்கானிக்கல்-11, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன்-4, நர்சிங்-8, லேப் டெக்னீசியன்-1, பார்மசி-4, ஹாஸ்பிட்டலிட்டி-2, ஹோட்டல் மேனேஜ்மென்ட்-1) தகுதி: பயிற்சியளிக்கப்படும் பாடத்தில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உதவித் தொகை: கிராஜூவேட் அப்ரன்டிஸ் பயிற்சிக்கு ரூ.15 ஆயிரமும், டெக்னீசியன் அப்ரன்டிசுக்கு ரூ.13,500ம், டிரேடு அப்ரன்டிசுக்கு ரூ.12 ஆயிரமும் உதவித் தொகையாக வழங்கப்படும்.
வயது:18 முதல் 30க்குள். எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
ஐடிஐ/டிப்ளமோ/பட்டப்படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
பட்டப்படிப்பு/ டிப்ளமோ படித்த விண்ணப்பதாரர்கள் முதலில் தங்களுடைய கல்வித் தகுதி பற்றிய விவரங்களை www.nats.education.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஐடிஐ படித்தவர்கள் www.apprenticeshipindia.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். பின்னர் www.nhpcindia.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.08.2025.