ஒன்றிய அரசுடன் இணைந்து புதிய திட்டம் கல்வித்துறையிலும் அதானி குழுமம்: அகமதாபாத்தில் 3 நாள் ஆலோசனை
அகமதாபாத்: அதானி குழுமமும், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவு அமைப்புகள் உடன் இணைந்து, நவம்பர் 20 முதல் 22 வரை அகமதாபாத்தில் உள்ள அதானி கார்ப்பரேட் ஹவுஸில் ‘இந்தோலஜி’ எனப்படும் இந்திய நாகரீகம், மொழிகள், தத்துவம், அறிவியல், கலாச்சார பாரம்பரியம் பற்றிய உலக அளவிலான கல்வி ஆய்வை நடத்தி வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் அறிவு அமைப்புகளின் மீதான உரிமையை மீண்டும் உறுதிப்படுத்தவும், உண்மையான, ஆராய்ச்சி சார்ந்த ஆய்வை உலகிற்கு வழங்கவும் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் அதானி குழுமமும், ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் இந்திய அறிவு அமைப்புடன் இணைந்து முன்னணி நிறுவனங்களில் 14 பிஎச்டி அறிஞர்களை ஆதரிக்க 5 ஆண்டு திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.13.16 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐஐடிகள், ஐஐஎம்கள், ஐகேஎஸ் பல்கலைக்கழகங்களில் உள்ள அறிஞர்கள் ஆய்வு பணியை மேற்கொண்டனர்.