தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உணவே மருந்து!

* சூடான சுக்குமல்லி காபியில் சிறிது தேன் கலந்து குடிக்க சளி கரையும்.

* நாட்டு வெங்காயம் இரண்டு அல்லது மூன்றை பச்சையாக சாப்பிட்டால் சளி கரையும்.

* பனை ஓலையில் பின்னப்பட்ட பாயில் படுத்து வந்தால் உடல் குளிர்ச்சி அடையும். கண் நோய்கள் வராது.

* முருங்கைக் கீரையை வெள்ளரி விதையுடன் அரைத்து வயிற்றின் மேல் கனமாகப்பூச சிறுசீர் கட்டு உடையும்.

* புளியங்கொழுந்தை பறித்து பச்சையாக சாப்பிட்டு வர கண்களைப் பற்றிய புண்கள், நோய்கள் ஆறும்.

* புளியங்கொட்டையை பொடி செய்து, தேங்காய் எண்ணெயில் குழைத்து புண்களின் மீது பூசிவர புண் ஆறும்.

* நல்லெண்ணெயை உடலில் தேய்த்துக் குளித்தால் அது மூலச்சூட்டை தணிக்கும். தோல் பகுதியை சுத்தமாக்கி வியர்வை வெளியேற உதவும்.

* அரிசியுடன் வெந்தயம் சேர்த்து, பூண்டை தட்டிப் போட்டு கஞ்சி வைத்துக் குடித்தால் எளிதில் செரிக்கும். இளம் தாய் மார்களுக்கு நன்றாக பால் சுரக்கும்.

* 2 கிராம் பெருங்காயத்தை 20 மி.லி. நல்லெண்ணெயில் காய்ச்சி வடித்து ஒரிரு துளிகள் காதில் விட காது வலி தீரும்.

* இருமல், மூச்சுத்திணறல் போன்ற சுவாசப் பிரச்னைகளுக்கு ஆட்டுப்பால் நல்ல மருந்தாகும்.

* பாலூட்டும் தாய்மார்கள் ஆட்டுப்பால் குடித்தால் அவர்களுக்கு போதுமென்ற அளவுக்கு பால் சுரக்கும்.

* கழுதைப்பால் உடல் சூட்டை தணிக்கும். உடல் துர்நாற்றம் போக்கும். வாத நோய்களின் தீவிரத்தைக் கட்டுப்படுத்தும்.

* அன்னாசிப்பழம் சாப்பிட்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்தம் ஊறும். பித்தம், கபம் போகும்.

- விமலா சடையப்பன்

Related News