மழை பாதிப்பு: தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் ஒன்றியக் குழு நாளை ஆய்வு
Advertisement
சென்னை: விளை நிலங்களில் மழை பாதிப்பு குறித்து செங்கல்பட்டு, தஞ்சை, மயிலாடுதுறை, திருச்சி, புதுக்கோட்டையில் ஒன்றியக் குழு நாளை ஆய்வு செய்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவாரூர், நாகை, மதுரை, தேனி மாவட்டங்களில் நாளை மறுநாள் ஒன்றியக் குழு ஆய்வு செய்கிறது. கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விளை நிலங்களில் அக். 27ம் தேதி ஒன்றியக் குழு ஆய்வு செய்கிறது. நெல்லின் ஈரப்பத அளவை 22%ஆக உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய குழுவினர் ஆய்வு செய்யவுள்ளனர். ஒன்றிய வேளாண்துறை இணை இயக்குநர் தலைமையில் 2 குழுக்களும், உதவி இயக்குநர் தலைமையில் ஒரு குழுவும் ஆய்வு செய்கிறது.
Advertisement