யூனியன் வங்கியில் 250 மேலாளர் பணியிடம்
பணி: வெல்த் மேனேஜர் (Wealth Manager)
மொத்த காலியிடங்கள்: 250. சம்பளம்: ரூ.64,820- 93,960.
வயது: 01.08.2025 தேதியின்படி 25 முதல் 35க்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: எம்பிஏ பைனான்ஸ்/பிஜிடிஎம்/பிஜிபிஎம்/பிஜிடிபிஏ ஆகிய ஏதாவதொரு படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ‘வெல்த் மேனேஜ்மென்ட்’ பிரிவில் குறைந்தது 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத் தேர்வில் குவாண்டிடேட்டிவ் அப்டிடியூட், ரீசனிங், ஆங்கில மொழி மற்றும் முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும்.தமிழ்நாட்டில் எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், விருதுநகர், நாகர்கோவில் ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: ரூ.1,180/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.177 மட்டும்.www.unionbankofindia.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.08.2025.