ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளில் வேலை: யுபிஎஸ்சி இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு அறிவிப்பு
வயது: 01.01.2026 தேதியின்படி 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். 30 வயதிற்குள் இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பில் ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி/எஸ்டி யினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும். முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் ஆகிய பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதாவது ஒன்றில் பி.இ.,/பி.டெக்., பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயர்லெஸ் கம்யூனிகேசன்/எலக்ட்ரானிக்ஸ்/ ரேடியோ பிசிக்ஸ்/ரேடியோ இன்ஜினியரிங்/எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன் பாடங்களில் எம்எஸ்சி பட்டம் பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் முதல்நிலை மற்றும் பிரதான இன்ஜினியரிங் சர்வீஸ் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.200/-. இதை ஸ்டேட் வங்கி மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/ பெண்களுக்கு கட்டணம் கிடையாது.
www.upsconline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: நாளை (16.10.2025.)