100 நாள் வேலை திட்டத்தின்கீழ் ரூ.2,000 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ள ஒன்றிய அரசு!!
டெல்லி: 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2,000 கோடிக்கு மேல் நிலுவை வைத்துள்ளதாக மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்ட நிதியை வழங்காதது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பினர். ஒன்றிய அரசு நிதியை விடுவிக்காததால் பல மாதங்களாக கிராமப்புற ஏழை மக்களுக்கு ஊதியம் வழங்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறினார்.
Advertisement
Advertisement