ஒன்றிய அரசின் வஞ்சனைக்கு எதிராக தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு
சென்னை: ஒன்றிய அரசின் வஞ்சனைக்கு எதிராக தமிழ்நாடு போராடும்; தமிழ்நாடு வெல்லும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு. நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு, தமிழ்மொழி மீதான தாக்குதல் மற்றும் இந்தித் திணிப்பு. மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடவாடி என அனைத்துக்கும் எதிராகத் தமிழ்நாடுபோராடும், தமிழ்நாடுவெல்லும் என முதல்வர் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement