நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது: சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றசாட்டு
சென்னை: நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றசாட்டு வைத்துள்ளார். பின்னர் பேசிய அவர்,
பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கம் எட்டியுள்ளது
நாம் திட்டமிட்டதைவிட பொருளாதாரம் 2% கூடுதலாக வளர்ச்சி அடைந்துள்ளது. இதற்கு முன்னதாக கலைஞர் ஆட்சியில்தான் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று இருந்தோம். நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரட்டை இலக்கத்தை எட்டியுள்ளது.
நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு வஞ்சிக்கிறது
நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது. கல்விக்கான நிதியை நாம் போராடித்தான் பெறும் நிலை இருப்பதை அனைவரும் அறிவீர்கள்.
ரூ.4000 கோடி நிதி இன்னும் வரவில்லை:
தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ.4 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு அளிக்கவில்லை. தமிழ்நாட்டுக்கு வழங்கவேண்டிய ரூ.4ஆயிரம் கோடியில் ரூ.450 கோடிதான் ஒன்றிய அரசு வழங்கி உள்ளது. குடிக்கக் கூடிய தண்ணீருக்கான நிதியை கூட ஒன்றிய அரசு வழங்க வில்லை.
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் நிதி ஒதுக்கவில்லை
அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக ஒன்றிய அரசு நிதியை விடுவிக்கவில்லை. அனைத்து மாநிலங்களுக்கும் சம வாய்ப்பு அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு நிதி வழங்க வேண்டும்.
தண்ணீருக்கான நிதியை கூட ஒன்றிய அரசு தரவில்லை
குடிக்கக் கூடிய தண்ணீருக்கான நிதியை கூட ஒன்றிய அரசு வழங்க வில்லை. ஜல்ஜீவன் திட்டத்தில் ரூ.3,407 கோடியை ஒன்றிய அரசு வழங்க வில்லை.
உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் அதிக சலுகைகள்
ஒன்றிய அரசு அறிவித்த 8 தேசிய அதிவேக வழித்தடத்தில் உத்தரப்பிரதேசத்துக்கு மட்டும் 3 வழித்தடங்கள். 8 புதிய அதிவேக சாலைககளில் ஒரு சாலை கூட தமிழ்நாட்டுக்கு வழங்கப்படவில்லை.
வளர்ச்சியடைந்த மாநிலம் என கூறி வஞ்சிக்கிறார்கள்
வளர்ச்சியடைந்த மாநிலம் என்பதை கூறியே தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. வளரக்கூடிய பிள்ளைகளுக்கு, நீங்கள் வளர்ந்து விட்டீர்கள் என கூறி ஊட்டச்சத்து நிதி தர மறுப்பு. தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சித்து வருவதை பட்டியலிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு வைத்தார்.
ஒன்றிய அரசு மீது தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு
தமிழ்நாட்டுக்கான நியாயமான பங்கு கூட திட்டமிட்டு மறுக்கப்படுகிறது. ரயில்வே திட்டங்களுக்கு உரிய நிதியை ஒதுக்குமாறு பிரதமரை சந்திக்கும்போதெல்லாம் முதுலமைச்சர் வலியுறுத்தி வருகிறார். ஒன்றிய அரசின் நிதிப்பகிர்வு சதவீதம் 7 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாக குறைந்துள்ளது. விளம்பர நோக்கத்தோடு ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது.
மக்கள் தொகைக்கு ஏற்ப நிதி வழங்கவில்லை
மக்கள் தொகைக்கு ஏற்ப ஒன்றிய அரசு நிதி ஒதுக்குவதில்லை என்று தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு வைத்தார். 6 சதவீதம் மக்கள் தொகை கொண்டு தமிழ்நாடு வெறும் 4 சதவீத நிதிப்பகிர்வைத்தான் பெறுகிறது. இந்தியாவின் குறைவான நிதிப்பகிர்வு பெறும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது.
உ.பி.யில் பெருமழை போல் நிதி ஒதுக்கீடு
உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு பெரு மழை போல து ஒன்றிய அரசு நிதி ஒதுக்குகிறது. ரூ.3 லட்சம் கோடி நிதி கொடுத்து விட்டு உத்தரப்பிரதேசம், ஒன்றிய அரசிடம் ரூ.10 லட்சம் கோடி பெற்றுள்ளது. ரூ.7.5 லட்சம் கோடி வரி வருவாய் தந்த தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு ரூ.2.5 லட்சம் கோடி மட்டுமே வழங்கியுள்ளது.
ஒன்றிய அரசை நோக்கி 10 கேள்விகள்
* ஒன்றிய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் இல்லையா?
*தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் ஏன் பாரபட்சம் காட்டுகிறீர்கள்?
*உயர்கல்வியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டில் புதிய கல்வி திட்டத்தை திணிப்பது மாற்றாந்தாய் மனப்பான்மை இல்லையா?
*ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தெற்கு ரயில்வேவுக்கு மட்டுமே ஏன் இந்த பாரபட்சம்?
* வாரந்தோறும் நடக்கும் ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் உ.பி. உள்ளிட்ட மாநிலங்களுக்கு மட்டும் பல திட்டங்கள் அறிவிப்பது சரியா?
* மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஏன் ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை?கோவை மாநகரத்தை ஒன்றிய அரசு புறக்கணிப்பதாக தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு. கோவை, மதுரை மெட்ரோ ரயில் நிலையங்களை அமைப்பதை ஒன்றிய அரசு மறுப்பது ஏன்?
*நகர்ப்புறங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு தமிழ்நாடு அரசு 90 சதவீதம் நிதி ஒதுக்குகிறது, ஒன்றிய அரசு 10% நிதிதான் தருகிறது.
*90 சதவீத தமிழ்நாடு நிதியில் கட்டப்படும் திட்டத்துக்கு பிரதமர் பெயரை ஒன்றிய அரசு வைக்கிறது.
*நிதியை குறைத்துவிட்டு புரியாத மொழியில் பெயர் வைப்பதுதான் உங்கள் வழக்கமா?
*ஏழை மக்களுக்கு தண்ணீருக்கு பதில் கண்ணீரைத்தான் பரிசளிக்கிறது ஒன்றிய அரசு.