Home/செய்திகள்/Union Government Congress Demonstration
ஒன்றிய அரசை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம்..!!
12:51 PM Jul 26, 2024 IST
Share
சென்னை: ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து சென்னையில் காங்கிரஸ் சார்பில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் ஒன்றிய அரசு வஞ்சித்துவிட்டதாக செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.