தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

"உங்களுடன் ஸ்டாலின்" என்னும் தலைப்பில் பல்வேறு அறிவுசார் போட்டிகள் நடத்த திட்டம்!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2021ம் ஆண்டு மே மாதம் ஆட்சிப்பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை உருவாக்கிச் செயல்படுத்தி வரும் தமிழ்நாட்டின் வளம் பெருக்கும் திட்டங்கள் பல! இத்திட்டங்களின் வாயிலாக மக்கள் பெற்றுள்ள தன்னிறைவு என்பது அவர்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றியுள்ளது. அதில் முக்கியமான திட்டமான, "உங்களுடன் ஸ்டாலின் திட்டம்" 15.7.2025 அன்று தமிழ்நாடு முதலமைச்சரால் தொடங்கிவைக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்தத் திட்டம் மக்கள் வாழ்வில் ஏற்படுத்தியுள்ள சிந்தனைகள், மாற்றங்கள் குறித்து, மக்களின் உணர்வுகளை அறிந்துகொள்ளும் வகையில், "உங்களுடன் ஸ்டாலின்" என்னும் தலைப்பில், செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம் பல்வேறு அறிவுசார் போட்டிகளை நடத்திடத் திட்டமிட்டுள்ளது.

"மக்களிடம் செல்; அவர்களோடு வாழ்; அவர்களை நேசி"- என்ற பேரறிஞர் அண்ணா அவர்களின் கொள்கைப் பாதையில் தமிழ்நாடு அரசு மக்களின் மீது கொண்டிருக்கும் அக்கறைக்கு மற்றுமொரு சான்றாக “உங்களுடன் ஸ்டாலின்” என்னும் புதிய திட்டத்தினை முதலமைச்சர் தொடங்கியுள்ளார்கள்.

தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும், அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள் / திட்டங்களை அவர்களின் இல்லங்களுக்கு அருகிலேயே சென்று வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும். நகர்ப்புறப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 13 துறைகள் 43 சேவைகள், ஊரகப் பகுதிகளில் நடக்கும் முகாம்களில் 15 துறைகள் 46 சேவைகள் வாயிலாக மக்கள் எளிதில் பயன்பெறும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஜூலை 15, 2025 முதல், நவம்பர் 2025 வரை பத்தாயிரம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

அரசின் சேவைகளை மிக விரைவாகவும் எளிதாகவும் வெளிப்படைத் தன்மையுடனும் பொதுமக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்கள் அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுகிறது. “சாதிச் சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, ஓய்வூதியம் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன்பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய, இருப்பிடச்சான்று, சிறு குறு விவசாயிகள் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்டவர் சான்று, பிறப்பு- இறப்பு சான்றிதழ், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை,மருத்துவ உதவிகள், எரிசக்தித்துறை உதவிகள், கூட்டுறவு உணவுத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உதவிகள், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உதவிகள், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை நலத்துறை உதவிகள், கால்நடை பராமரிப்பு பால்வளத்துறை உதவிகள், மீன் வளத்துறை உதவிகள் போன்றவைகளைப் பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக மக்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று தீர்வுகளை வழங்கி வருகிறார்கள்.

இது ஒரு புறமிருக்க, தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் மிக உயர்ந்த இடத்தை அடைந்துள்ளது, இது வேறு எந்த மாநிலமும் அடையாத வளர்ச்சி; 2021 -22 நிதியாண்டு முதல் 2024-25 நிதியாண்டு வரை ஏற்றுமதி கிட்டத்தட்ட இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் 2021-22ல் 2.9 கோடி பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைத்திருந்த நிலையில், அது 2024 -25 ஆம் ஆண்டில் 3.87 கோடியாக உயர்ந்துள்ளது. அரசு மற்றும் அரசு நிறுவனங்களுக்கு 70,022 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் இந்திய அளவில் 66.4 சதவிகிதமாகவும், தமிழ்நாடு அளவில் வெறும் 24 சதவிகிதமாகவும் உள்ளது. AVTAR ஆய்வு இந்தியப் பெருநகரங்களில் பணிக்குச் செல்லும் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான நகரம் சென்னை என்று தெரிவித்துள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் தொழிற்சாலைகள் செயல்படும் மாநிலம் தமிழ்நாடு. அதிக தொழிற்சாலைப் பணியாளர்கள் உள்ள மாநிலமும் தமிழ்நாடுதான். தொழிற்கூடங்களில் பணிபுரியும், மகளிரில் 43 சதவீதத்தின் தமிழ்நாட்டுப் பெண்கள் என்பதும் தமிழ்நாட்டிற்கும் கிடைத்துள்ள மற்றொரு சிறப்பாகும். 897 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10.28 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 30 சிப்காட் தொழிற்பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டாபிராம், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சேலம், விழுப்புரம் ஆகிய இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கலைஞரின் கனவு இல்லம் திட்டம் 2030 வரை 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இரண்டு இலட்சம் வீடுகள் ரூ.7,000 கோடி செலவில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு இதுவரை 1,00000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவையில்லாமல் மக்களின் போக்குவரத்து வசதிக்காக 3,727 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.

மக்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர்க் காப்போம் - நம்மைக் காக்கும் 48, முதல்வர் மருந்தகம் முதலிய திட்டங்கள் இந்தியாவிற்கே வழிகாட்டும் திட்டங்கள். மக்களுடன் முதல்வர் திட்டம் மூலம் 30 நாட்களில் தீர்வு காணப்பட்டு வருகிறது. இதுவரை 14,45,109 பேருக்கு வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. 27 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்றுள்ளனர்.

மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டங்கள் - திருநங்கையருக்கான திட்டங்கள் - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திட்டங்கள்- விவசாயிகளுக்கு – நெசவாளர்களுக்கு – தொழிலாளர்களுக்கு – மீனவர்களுக்கு – ஆதிதிராவிடர் – பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட – மிகவும் பிற்படுத்தப்பட்ட – சிறுபான்மையின மக்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் என்று திட்டங்களைத் தீட்டி, வளர்ச்சி என்னும் இலக்கை எளிதில் அடைந்து வருகிறது தமிழ்நாடு அரசு. அனைத்துத் துறை வளர்ச்சி - அனைத்து மக்கள் வளர்ச்சி - அனைத்து மாவட்ட வளர்ச்சி - அனைத்துச் சமூக வளர்ச்சி என்று எல்லார்க்கும் எல்லாம் என்ற வளர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. மேலும், அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சி அடைந்த மாநிலமாக ஒன்றிய அரசின் விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது தமிழ்நாடு.

இப்படியாக, தமிழ்நாடு, இந்தியாவிலேயே பொருளாதார வளர்ச்சியில் முதலிடத்தில் இருக்கிறது. வளர்ச்சி தேவை என்பது, ஒரு தனிமனிதரோ அல்லது சமூகமோ, தங்களின் தற்போதைய நிலையை விட மேம்பட்ட நிலையை அடைவதற்கான ஒரு உள்ளார்ந்த உந்துதலாகும். இது உடல், உளவியல், சமூக மற்றும் பொருளாதார அம்சங்களை உள்ளடக்கியது என்பதைத் தமிழ்நாடு அரசு உணர்ந்து செயல்பட்டு வருகிறது.

இவ்வாறாக, சீர்மிகு திட்டங்களால் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சிகளுடன் முதல்நிலை மாநிலமாக வளர்ச்சிப் பாதையில் சென்று தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கிறது. அதிலும், ' உங்களுடன் ஸ்டாலின் திட்டம்' குறித்து மக்களின் மனநிலையை அறியும் விதமாகச் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் ஊடக மையம், மாணாக்கர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்ளும் வகையில், உங்களுடன் ஸ்டாலின் என்னும் தலைப்பில் பல்வேறு அறிவுசார் போட்டிகளை 19-08-2025 முதல் 20-09-2025 வரை நடத்துகிறது. போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோர்க்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் நேரில் அழைத்துப் பாராட்டுச் சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கிச் சிறப்பிப்பார்கள்.

போட்டிகளும் அதன் விதிமுறைகளும் பின்வருமாறு;-

1. வெல்வோம் ஸ்டாலினுடன் உங்கள் கதையைப் பகிருங்கள் மற்றவர்களையும் பங்குபெறச் செய்யுங்கள்!

நோக்கம்:

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட ஏதேனும் ஒரு அரசு நலத்திட்டம், உங்கள் அல்லது உங்களுக்குத் தெரிந்த ஒருவரது வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்தியுள்ளது என்ற உங்கள் உண்மையான அனுபவத்தை ஒரு பக்கக் கட்டுரை அல்லது ரீலாக உருவாக்கி அனுப்புங்கள்.

• நீங்கள் தனியாகவோ அல்லது குழுவாகவோ இதில் பங்கேற்கலாம்.

• பகிரப்படும் வீடியோ மற்றும் கட்டுரை முற்றிலும் உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

2. புகைப்பட இன்போகிராஃபிக் வடிவமைப்புப் போட்டி

உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் சாதனைகளையும், மக்கள் பெற்ற நன்மைகளையும் கலைநயமிக்க மற்றும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பதாகைகளாக (Posters) வடிவமைத்து, அரசின் செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க உங்களை அழைக்கிறோம்.

DIPR ஊடக மையத்துடன் கைகோருங்கள்!

இந்த மாபெரும் முன்னெடுப்பில், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் (DIPR) ஊடக மையம் உடன் இணைந்து, அரசின் திட்டங்களைத் தமிழ்நாட்டின் கடைக்கோடி மக்களிடமும் கொண்டு செல்ல உதவுங்கள். உங்கள் படைப்பாற்றல் மூலம் அரசின் திட்டங்களுக்கும், சாதனைகளுக்கும் வலு சேர்ப்போம், வாருங்கள்!

வழிகாட்டுதல்கள் :

• புகைப்படம் (JPEG / PNG) அடிப்படையில் இருக்க வேண்டும் .

• அளவு: A4 வடிவில் அமைதல் வேண்டும்.

சிறந்த படைப்புகள் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் பகிரப்படும்.

3. விழித்தெழு மனிதி!

தமிழ்நாடு அரசின் திட்டங்கள், பெண்களின் உரிமைகளை வெறும் ஏட்டளவில் அல்லாமல், அவர்களின் வாழ்வில் செயல்படுத்தி, முன்னேற்றத்திற்கான வாசல்களைத் திறக்கின்றன. இதுவே ஒவ்வொரு பெண்ணையும் நோக்கி, "மனிதி வெளியே வா!" என்று அழைக்கும் அரசின் குரல்.

விடியல் பயணம், புதுமைப்பெண், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இதனடிப்படையில் வினாடி வினா கேள்விகள் கேட்கப்படும்.

4. போட்டியின் தலைப்பு: “உங்களுக்கு பிடித்த திட்டம்”

போட்டியின் விவரம்;

பங்கேற்பாளர்கள் தமிழ்நாடு அரசால் 2021-க்குப் பின் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து எழுத வேண்டும். அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுத்து, அதன் நோக்கம், மக்களுக்கு தரும் நன்மைகள், சமூகத்தில் ஏற்படுத்தும் மாற்றங்கள் போன்றவற்றைச் சிறப்பாக விவரிக்க வேண்டும்.

கட்டுரை அளவு: ஒரு பக்கம்

கட்டுரையை photo அல்லது PDF கோப்பு வடிவில் எடுத்து அனுப்ப வேண்டும்.

5. நம்முடன் ஸ்டாலின் - புகைப்படப் போட்டி

1.உங்களுடன் ஸ்டாலின் முகாமின் புகைப்படங்கள்

2. மக்கள் தங்கள் மனுக்களை ஆர்வத்துடன் அளிக்கும் காட்சிகள்.

3. அதிகாரிகள் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து, விளக்கமளிக்கும் படங்கள்.

4. மக்களின் நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் பிரதிபலிக்கும் புகைப்படங்கள்.

5. முதியோருக்கு, தன்னார்வலர்கள் அல்லது அரசு ஊழியர்கள் உதவி செய்யும் காட்சிகள்.

விதிமுறைகள்:

புகைப்படம், "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்துடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும்.

புகைப்படங்கள் JPG/PNG வடிவில், இருக்க வேண்டும்.

Related News