பாரீஸ்: ஐநா சபையின் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பான யுனெஸ்கோ இஸ்ரேலுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக அமெரிக்கா தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தது. இதையடுத்து இஸ்ரேலுக்கு ஆதரவாக யுனெஸ்கோவில் இருந்து விலக கடந்த 2017ம் ஆண்டில் டிரம்ப் நிர்வாகம் முடிவெடுத்து விலகியது. பின்னர் ஜோ பைடன் நிர்வாகத்தில் கடந்த 2023ம் ஆண்டு அமெரிக்கா மீண்டும் யுனெஸ்கோவில் இணைந்தது. இந்நிலையில் யுனெஸ்கோவில் இருந்து விலகுவதாக டிரம்ப் அரசு மீண்டும் அறிவித்துள்ளது.