தொன்மை மாறாமல் புதுப்பித்து பாதுகாத்தமைக்கு கும்பகோணம் துக்காச்சி ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனெஸ்கோ விருது!!
Advertisement
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலானது சுமார் 1,300 ஆண்டுகள் தொன்மையானதாகும். இத்திருக்கோயிலுக்கு இறுதியாக குடமுழுக்கு எப்போது நடைபெற்றது என்றே அறியப்படாத நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி ரூ.5 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு கடந்த 03.09.2023 அன்று வெகுவிமரிசையாக குடமுழுக்கு நடைபெற்றது. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் பண்பாட்டு நிறுவனமானது (UNESCO) 2024 ஆம் ஆண்டிற்கான சிறப்பு விருதினை (2024 - Award of Distinction) தொன்மை மாறாமல் புதுப்பித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமைக்காக கும்பகோணம் வட்டம், துக்காச்சி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயிலுக்கு வழங்கி சிறப்பித்துள்ளது.
Advertisement