தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடக்கம்: அமைச்சர் மா. சுப்பிரமணியன் அறிவிப்பு
Advertisement
சென்னை: தமிழ்நாட்டில் இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஜூலை 30ல் தொடங்கப்படும் என அமைச்சர் மா சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். மருத்துவ படிப்பில் சேர 75,000 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். சான்றிதழ்களை இணைக்க தவறிய மாணவர்களுக்கு 2 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. போலி ஆவணங்களை அளித்த 20 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு 3 ஆண்டு மருத்துவப்படிப்பில் சேர தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கான இறுதி பட்டியல் ஜூலை 25ம் தேதி வெளியிடப்படும் என அறிவித்தார்.
Advertisement