போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம்
நியூயார்க்: போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதற்கு ஐ.நா.பொதுச்செயலாளர் கண்டனம் தெரிவித்துள்ளார். போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காஸா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 46 குழந்தைகள் உள்பட 104 பேர் உயிரிழந்தனர்.
Advertisement
காஸாவின் தெற்கில் உள்ள ரஃபாவில் ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. துப்பாக்கிச்சண்டையில் இஸ்ரேல் வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து இரவு முழுவதும் காஸா மீது இஸ்ரேல் குண்டு வீசியது.
ரமல்லாவில் சட்டவிரோதமாக குடியேற்றியுள்ள இஸ்ரேலியர்கள், பாலஸ்தீனர்களின் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பாலஸ்தீனர் வாழ்விடங்களை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியர்கள் 2 ஆண்டில்1,073 பாலஸ்தீனர்களை கொன்றுள்ளனர்.
Advertisement