ஊமாண்டி முடக்கு பகுதியில் குறுகிய சாலையால் கடும் நெரிசல்
*விரிவாக்கம் செய்ய கோரிக்கை
வால்பாறை : வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதை 40 கொண்டை ஊசி வளைவை கொண்டது. இதில் ஊமாண்டி முடக்கு அடுத்த வளைவு பகுதி சாலை குறுகளாக இருப்பதால் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சிரமத்துடன் சென்று வருகின்றன.
எதிரெதிரே வரும் பேருந்துகள், லாரிகள், சுற்றுலா வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை ஒருவருக்கொருவர் வழி கொடுப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக பனிக்காலம், சுற்றுலா வாகன போக்குவரத்து உள்ள நாட்களில், அதிக வாகனங்கள் வருவதால் பெரிதும் வழிகொடுக்க வழியில்லாமல் போக்குவரத்து பாதிப்படைகிறது.
உடனடியாக சாலை விரிவாக்கம் செய்யப்படாவிட்டால் விபத்துகள் தவிர்க்க முடியாத நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளதாக வாகன ஓட்டுநர்கள் தெரிவிக்கின்றனர்.
சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தாலும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நெடுஞ்சாலைத்துறை உடனடியாக கவனம் செலுத்தி சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.