அல்ட்ராவயலட்டீ எப்77
அல்ட்ராவயலட்டீ நிறுவனம், தனது எப்77 என்ற எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளில் மூன்றாம் தலைமுறைக்கான ஜென் 3 பவர் டிரைன் பிர்ம்வேரை அப்டேட் செய்துள்ளது. இந்த மோட்டார் சைக்கிளில் 2 வேரியண்ட்கள் உள்ளன. மேக் 2 வேரியண்ட் 7.1 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது.
மேக் 2 ரெக்கான் 10.3 கிலோவாட் அவர் பேட்டரி கொண்டது. இவற்றிலுள்ள மோட்டார் அதிகபட்சமாக 40 எச்பி பவரையும் 100 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். புதிய பிர்ம் வேர் அப்டேட் மூலம், புதிதாக டாப் ரைடிங் மோட் ஆக பாலிஸ்டிக் பிளஸ் என்பது சேர்க்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்த மோட்டார் சைக்கிளின் திறன் சற்று மேம்பட்டுள்ளதாகவும், 80 லட்சம் கிலோ மீட்டர்கள் ஓடிய மேற்கண்ட மோட்டார் பைக்குகளின் தரவுகளை ஆய்வு செய்து இந்த அப்டேட் செய்யப்பட்டுள்ளதாகவும் நிறுவனத் தரப்பில் கூறப்படுகிறது.