தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

உலக்கை அருவி அருகே காட்டாற்று வெள்ளத்தில் 4 ஆயிரம் வாழைகள் நாசம்: இன்றும் மழை பெய்தால் ஊருக்குள் புகும் அபாயம்

பூதப்பாண்டி: உலக்கை அருவி அருகே கனமழையால் பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளம் அந்த பகுதியில் பயிரிடப்பட்டுள்ள சுமார் 4 ஆயிரம் வாழைகளை அடியோடு சாய்த்துவிட்டது. இன்றும் மழை தொடர்ந்தால் ஊருக்குள் புகுந்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் பிற்பகல் 3 மணி முதல் இரவு வரை மழை பெய்கிறது. குறிப்பாக மலையோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் பூதப்பாண்டியை அடுத்த உலக்கையருவி மலை, அசம்பு மலை பகுதியில் நேற்று பலத்த காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது.

இதனால் மலைப்பகுதிகளில் உள்ள நீரோடைகளில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஊருக்குள் புகுந்தது. இந்த காட்டாற்று வெள்ளம் உலக்கை அருவி பகுதியையொட்டி அமைந்துள்ள சட்டரஸ் பாலத்துக்கு இடையே சீறிப்பாய்ந்து செல்கிறது. இந்த பகுதியையொட்டி பெருந்தலைக்காடு பகுதியை சேர்ந்த அனிஷ் என்ற விவசாயி 5 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து அதில் சுமார் 5 ஆயிரம் வாழைகளை பயிரிட்டிருந்தார்.

வாழை குலை தள்ளும் பருவத்துக்கு வந்த நிலையில், இந்த காட்டாற்று வெள்ளம் நேற்று அனிஷ் பயிரிட்ட விவசாய நிலத்துக்குள் புகுந்து அங்குள்ள சுமார் 4 ஆயிரம் வாழைகளை அடியோடு சாய்த்துவிட்டது. இன்று காலையிலும் தண்ணீர் குறையாமல் பெருக்கெடுத்து ஓடுகிறது. இன்று இரவிலும் தொடர்ந்து மழை பெய்தால் காட்டாற்று வெள்ளம் ஊருக்குள் புகுந்துவிடுவதோடு மேலும் பல நிலங்களில் புகுந்து பயிர்களை நாசமாக்கிவிடும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சட்டரஸ் பாலத்துக்கு அடியில் காட்டாற்று வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்வதால் அந்த பாலத்தின் வழியே செல்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News